×

வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டியில் முத்தலாம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

 

வத்தலக்குண்டு, மே 5: வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இக்கோயில் நாட்டாமையாக அப்துல் கரிம் என்ற இஸ்லாமியர் பொறுப்பு வகித்து வருகிறார். இக்கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இதில் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்றனர். தொடர்ந்து கோயிலில் முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டியில் முத்தலாம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Muthalamman temple festival ,Vatthalakundu ,G. Thummalapatti ,Muthalamman Temple ,Abdul Karim ,Vaikasi festival ,Vathalakundu ,G.Thummalapatti ,
× RELATED வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்